தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால் ஆறு லட்சம் மாணவிகளுக்கு அந்த நிதியை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள் தான் உயர்கல்வியில் சேருகிறார்கள்.
அந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர், பட்டியலின மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் அனைத்து மாணவிகளுக்குமே இந்த திட்டம் பொருந்தும். மேலும் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும் 1000 ரூபாய் கட்டாயம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.