சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 3000 தரப்படும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு சட்டக்கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும், சீர்மிகு சட்டபள்ளியில் படித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் ரூ.3000 உதவித்தொகை தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.