Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  நெருக்கடியான காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன்கார்டு மற்றும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு எந்த காரணமும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்குமே தொழிலை  கடந்து அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. குடிமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்க மாநில அரசுகள், மத்திய அரசுக்கு உத்தரவிடபடுகிறது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |