சுகாதாரத் துறையினர் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன் முதல் கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.
அதன்பிறகு படிப்படியாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறையினருக்கும்,முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, “அரசு வழிகாட்டுதலை மீறி எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரத் துறையினருக்கு போட்ட தடுப்பூசிகள் 24% அதிகரித்துள்ளது. அதனால் பதிவு செய்து இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட வேண்டும்” என கூறியுள்ளது.