கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டு முதல் (2022-2023) பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என்று கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தவிர ஆர்கிடெக் படிப்பில் சேர +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.