நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்று மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் தடுப்பூசியில் 2 டோஸ் செலுத்தி கொள்ளாதவர்கள் அந்த மாநிலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
மராட்டிய அரசின் இந்த முடிவு பாரபட்சமானது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மராட்டிய அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பொது போக்குவரத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை சேர்ப்பது பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் உருமாற்றம் ஏற்பட அழைப்பு விடுக்கும் என்று கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.