நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி மத்திய பிரதேச மாநிலம் ஹன்ட்வா மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு மாவட்டம் முழுவதும் உள்ள 74 மதுக் கடைகளிலும் உடனடியாக அமலுக்கு வந்தது. மதுப்பிரியர்கள் மது வாங்க வேண்டுமானால் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை கடை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும். ஆதாரம் உண்மையாக இருந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என மதுபான கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.