Categories
தேசிய செய்திகள்

இனி இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்….. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ள துறைகளில் இருந்தும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்ததை அடுத்து வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்த கலாச்சாரம் சிறிய நகரங்களில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு WFH-ஐ மத்திய அரசு ஜூலையில் அனுமதித்தது. மொத்த ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த வசதியை நீட்டிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் இந்த முறையை அனைத்து நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |