Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இவர்கள் சேர வாய்ப்பில்லை”…. ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான தனுஷ்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ஆல்பம் பாடலின் புரோமோ காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி  அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தின செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோபத்தை குறைக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இதனால் கஸ்தூரிராஜா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி சென்று வருமாறு வற்புறுத்தினார். இதற்கு நடிகர் தனுஷ் செவிசாய்க்கவில்லை. இருப்பினும் தனது அப்பாவின் பேச்சை கேட்டு திருப்பதி செல்ல தனுஷ் சம்மதம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களளில்  பேசப்பட்டது.

மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ஆல்பம்  பாடலின் புரோமோ வெளியானது. மேலும் அனிருத் இசையமைத்துள்ள இந்த ப்ரோமோ பாடலில் ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் அவர் ஐஸ்வர்யா தனுஷ் என்று வைத்திருந்த பெயரை தற்போது நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் இவரின் பெயர் ஐஸ்வர்யா தனுஷ் என்றே இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியது இவர்கள் இனி சேர வாய்ப்பில்லை என்பதை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |