Categories
தேசிய செய்திகள்

இனி இவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் அணியலாம். அறிகுறியற்ற மற்றும் லேசான கொரோனா பாதிப்பு நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை அல்லது நோய் தடுப்பு சிகிச்சை பரிந்துரைக்கப்படவில்லை. கொரோனா அறிகுறிகள் தோன்றியதிலிருந்து முதல் 3-5 நாட்களுக்கு ஸ்டெராய்டு தடுப்பு மருந்துகள் தவிர்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |