ஆளுநரின் அதிரடி நடவடிக்கையால் பாஜக மகிழ்ச்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கவும், 2024 -ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவியை கைப்பற்ற பாஜக திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மாநில கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளார். மேலும் பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு சென்றால் அவரை வரவேற்க செல்லாத அளவிற்கு அவர் உள்ளார். இந்நிலையில் முதல்வர் சந்திரசேகரராவை தமிழிசை சௌந்தரராஜன் ஆட்டக்காணம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்ட போது தெலுங்கானாவில் சாதாரண பொம்மை ஆளுநராக இருப்பார் என்று பல கட்சியினர் கணக்கு போட்டு வைத்தனர். ஆனால் தமிழிசை முன்னாள் அரசியல்வாதி மட்டுமல்லாமல், நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என தனது அதிரடியால் பதில் கொடுக்க தொடங்கினார். அதாவது தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு புகழ்பெற்ற நிகழ்வுக்கு செல்ல தமிழிசை திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அந்தப் பகுதி மிகவும் மோசமான பகுதி என்பதால் வாகனத்தில் செல்வது பாதுகாப்பாக இருக்காது என்பதோடு, சவாலான காரியம் என கூறப்பட்ட போதிலும், நிகழ்வில் பங்கேற்பதற்கு தமிழிசை விரும்பினார். இதனையடுத்து அவர் மாநில அரசிடம் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தருமாறு கூறினார். ஆனால் கடைசிவரை மாநில அரசு ஹெலிகாப்டர் வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி ஒருவர் குறிப்பிட்ட இடம் முழுவதும் பாதுகாப்பு குறைவான பகுதி எனவே அங்கு காரில் செல்வது என்பதே சவாலான ஒன்று என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்றும், ஒருவேளை காரில் சென்றாலும் சரியான நேரத்திற்கு போக முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை கேட்டு தமிழிசை உங்களால் முடிந்தால் பாதுகாப்பு கொடுங்கள். இல்லையென்றால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஊடகங்களில் இது பிரேக்கிங் செய்தியாக மாறியது.
அதேசமயம் பாதுகாப்பு கருதி 3 வாகனங்களில் மாறி மாறி பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழிசை அந்த நிகழ்வுக்கு சென்றடைந்தார். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் போட்ட அனைத்து தடைகளையும் உடைத்து எரிந்து, ஆளுநர் தமிழிசை வந்ததை பார்த்து அமைச்சர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அதிர்ச்சிகள் உறைந்து போய் உள்ளனர். இதுபோல் களத்தில் இறங்கி மாணவிகள் பிரச்சனை என்று ஒவ்வொன்றிலும் தமிழிசை முத்திரை பதித்த பின்னர் தான் சந்திரசேகர ராவ் மகன் குறிப்பிடப்பட்டு இடத்துக்கு சென்று கேடிஆர் மக்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. இப்படியாவது நாள்தோறும் களத்தில் இறங்கி, ஆளுநர் தமிழிசை மக்கள் பணியில் கவனம் செலுத்துவதை பார்த்து தெலுங்கானா மாநில அரசு அதிர்ந்து போய் கிடக்கிறது.
இதனையடுத்து தெலுங்கானாவின் நிலைமை இப்படி இருக்கையில். புதுச்சேரியிலும் ஆளுநர் தமிழிசை கொடி மேலோங்கி பறப்பதாக அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் டென்ஷனான தமிழிசை அரசு வேடிக்கை பார்க்காது பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என அதிரடி காட்டியது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது. புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் நிலவி வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் துணை ராணுவத்தை இறக்கியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தெரியாமலேயே மின் துறையை தனியார் மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டு இருக்கிறார் என கூறியுள்ளார். இது தமிழிசையின் அதிரடிக்கு சான்று என பரவலாக கூறப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக 2 மாநில அரசியல் என ரியல் பொன்னியின் செல்வியாக மாறி இருக்கும் இவர் மீது பாஜக மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.