Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி இ-பாஸ் பெற தேவையில்லை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இனி இ பாஸ் தேவை இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இ பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்பவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி குமுளி, போடி மெட்டு வழியாக கேரளா செல்பவர்கள் இ பாஸ் பெற தேவையில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கம்பம்மெட்டு வழியாக சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

Categories

Tech |