Categories
Tech

இனி உங்கள் போனில் Spam கால்கள் வந்தால் பயமில்லை…. Alert கொடுக்கும் Google Voice…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பயணர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்களின் தொலைபேசி எண்களுக்கு அதிகமாக spam கால்கள் வருவதாக புகார்களும் எழுந்துள்ளது. Spamகால்களை எடுப்பதன் மூலம் நம்முடைய மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான கூகுள் செயல்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவ்வகையில் Google voiceசெயலியில் வரும் இன்கம்மிங் கால்களுக்கான அழைப்பு விவரங்களை தெரிவிக்கும் போது suspected spam caller என்ற லேபிள் மூலம் எச்சரிக்கப்படும். அதனால் சந்தேகத்திற்கு இடமான அல்லது மோசடிக்காரர்களின் அழைப்புகளை பயனர்கள் எளிதில் தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அந்த நம்பர் spam கால்அல்ல என்று நாம் தேர்வை மாற்றி விட்டால் அடுத்த முறை உங்களுக்கு அந்த நம்பர் spam ஆக காட்டப்படாது. இந்த புதிய மாற்றத்துடன் மேலும் ஒரு அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்முடைய மொபைல் போன்களில் நெட்வொர்க்கை மாற்றும் முறையும் கூகுள் வாய்ஸ் மூலமாக செய்ய முடியும். இந்த புதிய மாற்றங்கள் பயனர்களுக்கு சிறப்பான சேவை அனுபவத்தை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |