நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) வாயிலாக கோடிட்டு காட்டப்பட்டுள்ள போலி ரேட்டிங்க்ஸை சரிபார்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. BISன் புது தரநிலையான IS 19000:2022, இ-மெயில் அட்ரஸ் வாயிலாக ரிவ்யூ கொடுப்பவரை சரிபார்த்தல், கால் (அ) sms மூலம் அடையாளம் காணுதல், லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரேஷனை உறுதிப்படுத்துதல் மற்றும் கேப்ட்சா சிஸ்டமை ரிவ்யூ செய்பவரின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் முறைகளையும் வழங்குகிறது.
இதற்கிடையில் தயாரிப்புகளை ரிவ்யூ செய்ய விருப்பப்படும் யூஸர்கள் முதலாவதாக தொடர்பு தகவலை வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவேண்டும். பிளாட்பார்ம்களில் வெளியிடப்படும் ரிவ்யூக்கள் பப்ளிஷிங் டேட் மற்றும் ரேட்டிங்ஸ்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என புதிய விதிகள் கூறுகிறது. புதிய விதிகளின் அடிப்படையில் யூஸர்கள் தங்களது ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்ததும் அவற்றை திருத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ரிவ்யூஸ்களை போஸ்ட் செய்ய விரும்பும் யூஸர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். அத்துடன் அவர்களின் கான்டாக்ட் இன்பர்மேஷன்களை வழங்க வேண்டும். அதே நேரம் ஏதேனும் வெப்சைட்ஸ் போலி ரிவ்யூஸ்களை கொண்டிருப்பது கண்டறியப்பட்டால், அவை நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கருதி அபராதம் விதிக்கப்படும். இது Zomato, Swiggy, Tata Sons, Reliance Retail, Meta மற்றும் Amazon போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.