இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக் கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இதனை ஆன்லைனில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதார் மையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அப்படி செல்லும் போது உங்கள் பகுதியில் ஆதார் மையம் எங்கு உள்ளது என்பதை கண்டறிய சிரமமாக இருக்கும் பட்சத்தில் ஆதார் இருப்பிடம் கண்காணிக்கும் வசதியை தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தர ஆதாரம் அமைப்பு முடிவு செய்துள்ளது.அதன்படி ஆதார் மையத்தை கண்டறிய யுவன் ஆதார் போர்டலை தொடங்கியுள்ளதாக UIDAI ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நீங்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆதார் மையத்திற்கு செல்வதற்கான வழியும் இதில் உங்களுக்கு தெளிவாக கிடைக்கும். நீங்கள் இருந்த இடத்திலிருந்து கொண்டே ஆதார் மையம் எவ்வளவு தூரத்தில் உள்ளது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற முடியும்.