Categories
பல்சுவை

இனி உங்க வாட்ஸ் அப் Profile போட்டோவை…. யார்லாம் பாக்கலாம்னு நீங்களே முடிவு பண்ணலாம்…. விரைவில்…..!!!

உலக அளவில் கோடானகோடி பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக்கின் நிறுவனமான வாட்ஸ் அப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. மேலும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டு வருவதற்காக அந்நிறுவனம் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இதில் பயனர்கள் பாதுகாப்பிற்காக சுப சுயவிவரம் புகைப்படத்தை மறைக்கும் புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் யார்? சுயவிவர போட்டோவை பார்க்கலாம் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால் வாட்ஸ் அப் செயலியில் சுயவிவரப் புகைப்படத்தை மறைக்கப்பட முடியும். அதில் நோபடி மற்றும் மை கான்டாக்ட் என்ற இரண்டு பிரிவு மட்டுமே உள்ளது.

இதனால் வாட்ஸ்ஆப் செயலி மை கான்டாக்ட் எக்ஸப்ட் என்ற புதிய பிரிவை கொண்டுவர சோதனை மேற்கொண்டு உள்ளது. மேலும் அதில் லாஸ்ட் சீன் என்ற பிரிவையும் மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போதைய புதிய அம்சம் ஆண்ட்ராய்டு 2.21.21.2 என்ற பீட்டா அப்டேட்டில் மட்டும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |