இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் ஆகிவிட்டது. அதன்படி உணவு டெலிவரி நிறுவனமான zomataவில் இதுவரை நாம் விரும்பும் உணவை விரும்பிய நேரத்தில் உட்கார்ந்த இடத்தில் கொண்டே ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தோம். அதனால் நம் பெற்றோர் செலவு மிச்சமானது. இதனிடையே கடந்த சனிக்கிழமை zomato டெல்லி என்சிஆரிலுள்ள அதன் பிரதான தலமான பிலிங் கிட் ஆப் வழியாக மளிகை பொருட்களை விநியோகிக்கும் சோதனையை தொடங்கியுள்ளது.
ஏனென்றால் ஆன்லைன் உணவு டெலிவரி தளமான லாபத்திற்கான பயணத்தை அடுத்து அதை வியாபாரத்தை விரைவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த சோதனை தற்போது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் நடத்தப்பட உள்ளது.அது நல்ல வரவேற்பு இருந்தால் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த zomoto திட்டமிட்டுள்ளது.
பைலட் திட்டத்தில் உள்ளவர்கள் zomatoவின் பிரதான செயலியில் Blinkitமூலம் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு 150 ரூபாய்க்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். அதே zomatoவில் அது 49 ரூபாய் தான்.இதனை தொடர்ந்து ஏற்கனவே வீட்டில் இருக்கும் பெண்கள் அடிக்கடி கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்குவதற்கு பதில் சொமோட்டோவில் ஆர்டர் செய்தால் மட்டும் போதும் உங்கள் வீடு தேடி வரும். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.