Categories
தேசிய செய்திகள்

இனி உங்க PF வைப்புத் தொகையை எளிதில் பார்க்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…..!!!!

மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். PFஎன்றால் மாதம் தோறும் சம்பளத்தில் ஒரு தொகையைப் பிடித்தம் செய்து கணக்கில் சேர்த்து விடுவார்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்கள் பி எப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் உங்கள் பிஎஃப் கணக்கில் லாகின் செய்து பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. உங்கள் UAN நம்பர் இல்லாமல் எளிய வழிகளில் உங்கள் பி எப் இருப்பு தொகையை பார்க்க முடியும்.

PF பணத்தைச் சரிபார்க்க உதவும் 3 வழிகள்:

1. எஸ்.எம்.எஸ் மூலம் PF பணத்தைச் சரிபார்க்கலாம்.

உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு SMS EPFOHO UAN ENG என்று டைப் செய்து அனுப்பினால் போதும் உங்கள் மொத்த PF தொகை குறித்து விவரங்களும் SMS மூலம் வரும்.

2. மிஸ்டு கால் மூலம் PF பணத்தைச் சரிபார்க்கலாம்

உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரிலிருந்து 011-22901406 என்ற இந்த நம்பருக்குக் கால் செய்த பின் உங்களின் மொபைலுக்கு உங்கள் மொத்த PF தொகை குறித்து விவரங்களும் SMS மூலம் வந்துவிடும்.

3. UMANG ஆப் மூலம் PF பணத்தைச் சரிபார்க்கலாம்.

உங்கள் Playstore இருந்து UMANG ஆப்பை டவுன்லோடு செய்து உங்களின் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையவும்.  அதில் EPFO என்ற ஆஃப்சனை தேர்வு செய்து Viwe Passbook என்ற ஆஃப்சனை தேர்வு செய்து அதில் உங்களின் UAN எண்ணை உள்ளிட்டால் உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதனை Submit கொடுத்து உள்நுழைந்தால் போதும் அனைத்து தகவல்களும் அதில்கிடைக்கும்.

Categories

Tech |