இந்திய ரயில்வே மக்களுக்காக பல்வேறு சிறந்த சலுகைகளை அவ்வபோது செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் ரயில் முன்பதிவு திட்டம். இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த ஆப் ஏற்கனவே செயலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ரயில் டிக்கெட் சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டால் அதற்கான பணம் வெகு நாட்கள் கழித்து தான் வருகின்றது.
ஆனால் தற்போது IRCTC ipay என்ற ஆப்பின் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி IRCTC ஆப் மூலமாக முன்பதிவு செய்ய முதலில் http://www.irctc.co.in என்ற இணையதளப் பக்கத்தில் செல்ல வேண்டும்.அதன் பிறகு பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். IRCTC ipay என்ற முதல் விருப்பத்தைத் தேர்வு செய்து பணம் செலுத்துதல் மற்றும் முன்பதிவு செய்தல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்கள் டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்படும். அதன் பிறகு உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வரும். அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் கட்டண விவரங்களை மீண்டும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தேவை ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்தால் உடனடியாக பணத்தை நீங்கள் திரும்ப பெறலாம்.