Categories
தேசிய செய்திகள்

இனி உணவு பில்களில் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

FSSAI – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு தொடர்பான ஒரு பலப்படுத்துதல் சட்டதத்ன் கீழ் நிறுவப்பட்டுள்ளது. FSSAI உரிமம் கட்டுப்பாட்டு மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையின் மூலம் பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்தியாவில் உள்ள சிறிய உணவு கடை முதல் அனைத்து பெரிய ஹோட்டல்களிலும் fssai உரிமம் என் பெற வேண்டியது கட்டாயம். தரமான உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இது கொண்டுவரப்பட்டது. இது இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் உணவு விற்பனை பில்களில் இனி fssai உரிமம் எண்ணை கட்டாயம் அச்சிட வேண்டும் என உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |