தளர்வு குறித்து புதுடெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மூன்றாவது அலையான புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசும்,மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது . இந்நிலையில் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது கரோனா வைரஸ் குறைந்து வருகின்ற நிலையில் வார இறுதி ஊரடங்கு தளர்வு குறித்து புதுடில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
இதில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒற்றைப்படை ,இரட்டைபடை இலக்க அடிப்படையில் செயல்பட்ட கடைகள்,சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இனி வார இறுதி நாட்களிலும் செயல்படலாம் . தனியார் நிறுவனங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் 50 சதவீத பணியாளர்களுடன் வேலையை தொடங்கலாம் என்றும் வார இறுதி நாட்களின் போது அவசரகால சூழ்நிலைகளில் எதிர் கொள்பவர்கள் மற்றும் அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்கள் அரசின் அனுமதி அட்டையை காண்பித்து வெளியே செல்லலாம் என்று அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.