கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்திலே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள அணைத்து மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுதத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பரவலாக வலியுறுத்தப்படும் கருத்து என்னவென்றால், இது போன்ற முடக்கங்களால் பலன் ஏதும் இல்லை என்றும், அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கொண்டு வரப்படும் ஊரடங்கினால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடம் அவர்களுடைய பணிகளுக்கு அவர்களால் செல்ல முடிவதில்லை, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று தொடர்ந்து வலியுறுத்தப் பட்டது.
இத்தகைய காரணத்தால் தான் தற்போது கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே டெல்லியில் கொரோனவுடன் வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியதோடு, டெல்லியில் இருந்த பெரும்பாலான முடக்கங்களை நீக்கிவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகாவிலும் அதேபோல ஒரு நிலைப்பாட்டை தற்போது மாநில அரசு எடுத்திருக்கின்றது.