தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
Categories