பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளாத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும்.
அப்போது ஒரு form கிடைக்கும். அதில் கிராமப்புறம், நகர்புறம் எனக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்கு பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து சப்மீட் செய்யவேண்டும். பின்னர் உங்களது மாவட்டம், வட்டம் போன்ற தகவலைக் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது பட்டா எண், புல எண்ணைக் கொடுக்கவேண்டும். அப்பகுதியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் security codeஐ டைப் செய்து சப்மீட் கொடுக்கவேண்டும். அப்போது உங்களது பட்டா தொடர்பான விவரங்கள் அனைத்தும் கிடைக்கும்.