Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணமாக உள்ளது.  அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும் அரசு அளிக்கும் வசதிகளையும் பெற ஆதார் அட்டையை வைத்திருப்பது மிகவும் அவசியம். இருந்தாலும் ஆதாரில் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட வங்கிகள், முதலீட்டு திட்டங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு திட்டங்கள் போன்றவற்றில் படங்கள் ஆகியவற்றை பெற முடியாமல் போகலாம்.

அதனால் ஆதார் அட்டையை புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும். அதன்படி உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைன் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த மாற்றங்களை செய்ய முடியும்.

தகவல்தொடர்பு அமைச்சகம் இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், “ஆதார் அட்டையில், மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதன் மூலம், பயனாளர், அரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களான பிடிஎஸ்/டிபிடி திட்டங்களுக்குப் பதிவு செய்தல், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் பெறுதல், புதிய மொபைல் சிம் இணைப்புகளுக்கு KYC, ஆன்லைனில் மக்கள்தொகை விவரங்களைப் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்திற்கான RTO சேவைகளை அணுகுதல், வருமான வரி வருமானத்தை சரிபார்த்தல் மற்றும் EPFO ​​சேவைகள் பற்றிய தகவல் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை பெற முடியும்” என்று இதில் கூறப்பட்டுள்ளது.

தபால்காரர் ஒருவரை தங்கள் வீட்டிற்கு வர கோரிக்கை விடுத்து பயனாளர் இப்போது தங்கள் மொபைல் எண்களை ஆதார் அட்டையில்  புதுப்பிக்க முடியும். நாடு முழுவதும் உள்ள இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் 650 கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை அணுக முடியும். அதை எளிதாக்கும் பொருட்டு, IPPB 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவக் பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் பயனாளர்களின் வீட்டிற்கே வந்து ஆதார் தகவல்களைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.

Categories

Tech |