இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மடிக் கணக்கில் வங்கியில் நிற்காமல் எளிதில் வீட்டிலிருந்து கொண்டே SBI yono மற்றும் எஸ்பிஐ இணையதளத்தில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதலில் உங்களது மொபைல் போனில் YONO SBI யை லாகின் செய்து, Service என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு சேமிப்புக் கணக்கை மாற்றுதல் (Transfer of Saving Account) என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கி கிளையின் புதிய குறியீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். Get branch என்ற பெயரை கிளிக் செய்து புதிய கிளையின் பெயரை காண முடியும். இது போன்று நீங்கள் செய்து முடித்ததும் உங்களது கணக்கை மாற்றுகிறீர்களா? என கேட்கும் போது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை டைப் செய்து submit பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்களது சேமிப்புக் கணக்கு வேறு கிளைக்கு மாற்றிவிடலாம்.
SBI இணையதளத்தை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றும் முறை:
இதற்கு முதலில் நீங்கள் எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று, லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு Menu bar ல் உள்ள E- service ஆப்சனை கிளிக் செய்து Transfer the saving account என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து உங்களது வங்கிக்கோடு மற்றும் டிரான்ஸ்பர் செய்ய நினைக்கும் கிளையின் கோடு இரண்டையும் டைப் செய்து, Read and accept என்ற ஆப்சனை கிளிக் செய்து சப்மிட் கொடுத்த பின்னர் கன்பார்ம் செய்யும் முன்னர் நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியா என்பதை பார்த்து கொள்ளவும். இறுதியில் உங்களது மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை சரிபார்த்து confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.இப்போது உங்களது சேமிப்பு கணக்கு வேறு கிளைக்கு மாறிவிடும்.