Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் போக வேண்டாம்…. வீடு தேடி வரும் ஆதார் சேவை…. அசத்தலான புதிய வசதி அறிமுகம்…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி சேவை முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பொதுமக்களுக்கு ஆதார் கார்டு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஆதார் கார்டு தாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்குவதற்கு புதிய சேவையை UIDAI கொண்டுவந்துள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. அனைத்து விவரங்களையும் ஆன்லைன் மூலமாகவே மாற்றுவதற்கான விருப்பத்தை ஆதார அமைப்பு வழங்குகின்றது.

இருந்தாலும் மொபைல் நம்பர் புதுப்பிப்பு அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் போன்ற திருத்தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஆதார் அப்டேட்டை எளிதாக மேற்கொள்வதற்கு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் பணிபுரியும் 48,000 தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக ஆதார அமைப்பு கூறியுள்ளது. தபால்காரர்கள் பயிற்சி முடிந்த பிறகு குடிமக்களின் வீட்டு வாசலில் ஆதார் புதுப்பிப்பு சேவைகளை வழங்குவார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆதார் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத தனி நபர்களுக்கான புதிய ஆதார் அட்டைகளை உருவாக்கவும் அவர்கள் உதவுவார்கள். இந்த சேவையை வழங்குவதற்காக தபால் காரர்களுக்கு டிஜிட்டல் கேஜெட் , டெக்ஸ்டாப் அல்லது லேப்டாப் அடிப்படையிலான ஆதார் கார்டு கருவி வழங்கப்படும். ஆதார் அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிப்பது தபால்காரர்கள் இந்த கருவியை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் தபால்காரர் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகளையும் இனி உருவாக்கித் தருவார்கள் .இந்த வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது

Categories

Tech |