Categories
மாநில செய்திகள்

இனி எப்படி அடிக்கிறீங்க பாக்கலாம்…. நீதிமன்றம் உத்தரவு…. மக்கள் நிம்மதி…!!

தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமெராக்களை பொறுத்த உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்தில் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதே போன்று தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் கடுமையாக தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், புகார் கொடுக்க வரும் பொது மக்களின் உரிமைகள் பற்றிய பலகையை அனைத்து காவல் நிலையங்களில் வைப்பதற்கும் உயர்நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |