Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே மாறப்போகுது…. ரயில் டிக்கெட் புக்கிங் இனி இப்படிதான்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். பேருந்துகளை விட ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், நிறைய வசதிகள் இருப்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் அதில் உள்ள விதிமுறைகள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்திருக்க வேண்டும். IRCTC ஆப் அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

அதனால் IRCTC விதிமுறைகளை அவ்வபோது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி IRCTC கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் 6 முறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதைவிட கூடுதலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பினால் உங்கள் கணக்கினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். அதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் மாற்றம் ஏற்பட உள்ளது. எனவே இனி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு கூட உங்கள் ஆதார் கார்டு விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அதாவது IRCTC டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையை மாற்றுகின்றது.

அடுத்த முறை ஆன்-லைன் மூலமாக ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது உங்களின் பான் கார்டு, ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு அமைப்புகளிலிருந்து ரயில்வே டிக்கெட் தரகர்களை விலக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.

IRCTC விதிமுறை மாற்றத்திற்கு பிறகு, இந்த இணையத்தளம் அல்லது செயலி மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் உள்நுழையும் போது உங்களுடைய ஆதார், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட வேண்டும் என்பது அவசியம். இதற்குப் பிறகு டிக்கெட் புக்கிங் செய்வதில் உள்ள செயல்முறைகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இது பயணிகளுக்கு சிரமமாக இருந்தாலும் கூட அது பயணிகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரயில் சுரக்ஷா ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |