நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோலி பண்டிகை என்று மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இலவச சிலிண்டர் அனைவருக்கும் கிடைத்து விடாது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அதற்கு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச ஸ்லீவ் டிரஸ் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு மாநில அரசிடம் இருந்து இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குவதற்கான பரிந்துரையை நிதித்துறைக்கு அனுப்பி உள்ள நிலையில் அரசிடமிருந்து பட்ஜெட் ஒதுக்கப்பட்ட பிறகு இலவச கேஸ் சிலிண்டர் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த முறை ஹோலி பண்டிகை என்ற பொது மக்களுக்கு ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பின்னர் தீபாவளி அன்று இரண்டாவது இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.