Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்களில் சேவை கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோம். ஏடிஎம் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நாம் பணத்தை எடுக்கலாம். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. வங்கிக் கணக்கு இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும், வேறு வங்கிகளில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும் மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 முறையும் இலவசமாக பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அதன்படி, இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஆன கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளை தாண்டி மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரிப்பதால் இந்த பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1 இல் இருந்து அனைத்து வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

Categories

Tech |