Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது ரூல்ஸ்…. SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி இருக்கிறது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு SBI புதிய முயற்சி எடுத்துள்ளது. SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு OTP ஐ உள்ளிடுவது தற்போது  கட்டாயமான ஒன்றாகும். இந்த புதிய விதியின் கீழ் வாடிக்கையாளர் OTP இன்றி பணத்தை எடுக்க முடியாது. இதில் பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு OTP வரும், அதை உள்ளிட்ட பின்பே, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியும். மோசடியில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு புதிய விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 10,000 மற்றும் அதற்கு மேல் திரும்பப் பெறும்போது இந்த விதிகள் பொருந்தும்.

SBI வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ10,000 மற்றும் அதற்கு மேலாக பணம் எடுக்க அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு பின்னுக்கு அனுப்பப்படும் OTP ஐ பெறப்பட்டது. SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு OTP அவசியம். இதற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP ஆனது 4 இலக்கமாக இருக்கும். அதனை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறுவார். ஆகவே நீங்கள் எடுக்க விருப்பப்படும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படும். அதன்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPI பணம் எடுக்க இந்தத் திரையில் இருக்க வேண்டும்.

Categories

Tech |