Categories
தேசிய செய்திகள்

இனி ஏடிஎம்-ல் பணம் எடுக்க…. புதிய ரூல்ஸ் வருது…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!!

ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி  ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு இலவசமாக ஐந்து முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் பண பரிவர்த்தனை மற்றும் பணம் சாரா பரிவர்த்தனைகள் எல்லாம் அடங்கி விடும். வேறு வங்கி ஏடிஎம்மில் பொருத்தவரை இலவசமாக மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மற்ற பகுதிகளில் 5 முறையும் எடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும்போது ரூபாய் 20 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டணமும் 2022 ஆம் வருடம் ஜனவரி முதல் 21 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

Categories

Tech |