உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp பயன்படுத்தி வருகிறார்கள்.இதனிடையே பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பயணக் குறுக்கீட்டை மேம்படுத்துவதில் whatsapp தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் ஸ்கிரீன் ஷாட் களை தடுப்பது, மெசேஜ்களுக்கான தனிப்பட்ட எமோஜிகள், IOS மற்றும் ஆண்ட்ராய்டு இடையே மாற்றம்,குறிப்பிட்ட பயனர்களை அழைப்புகளில் இருந்து நீக்குவது போன்ற அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் புதிய அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. அவ்வகையில் வாட்ஸ் அப் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்கேற்பாளர்களின் பட்டியலை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.ஆனால் கடந்த அறுபது நாட்களில் குழுவில் இருந்து வெளியேறியவர்கள் அல்லது அகற்றப்பட்டவர்கள் யார் என்பதை விரைவில் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
இந்த பட்டியல் அனைத்து குழு உறுப்பினர்கள் மற்றும் அட்மின்களுக்கும் அணுகக் கூடிய வகையில் இருக்கும். இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற வாட்ஸ் அப் பயணங்கள் தங்கள் சொந்த 3d கார்ட்டூன் அவதாரத்தை உருவாக்கி அதனைக் கொண்டு சாட் செய்ய அனுமதிக்கும். இந்த புதிய அம்சத்தின் மூலமாக 3d கார்ட்டூன் அவதாரத்தின் ஸ்டிக்கர்களை உங்களால் அனுப்ப முடியும்.
மேலும் வீடியோ அழைப்புகளின் போது அதை உங்கள் படமாக பயன்படுத்தலாம்.இறுதியாக பார்த்ததை மறைப்பதைப் போலவே பயணங்கள் தங்கள் ஆன்லைன் நிலையை மறைக்க whatsapp விரைவில் அனுமதிக்கும். நீங்கள் whatsapp செயதியை பயன்படுத்தும் போது உங்கள் ஆன்லைன் நிலை யாருக்கும் காண்பிக்காது.இந்த புதிய அப்டேட்டுகள் அனைத்தும் வாட்சப்பில் விரைவில் வர உள்ளதாக பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.