வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பேடிஎம், கூகுள் பே போன்று கேஷ்பேக் கூப்பன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை வசதிகளை ஆரம்பித்தது. மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் வரையில் சோதனை முயற்சியில் (பீட்டா) இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் பேமெண்ட் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் வாட்ஸ்அப்-ஆல் குறிப்பிட்ட கவனத்தை இந்தியாவில் பெற இயலவில்லை. எனவே வாட்ஸ்அப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி போட்டி ஆப்புகளாக கருதப்படும் பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்றே கேஷ்பேக் ஆஃபர் ஒவ்வொரு பேமெண்டிற்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.