Categories
தேசிய செய்திகள்

இனி ஓடவும் முடியாது – ஒழியவும் முடியாது….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவின் இணையதளத்தில் தனிநபரின் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா? எத்தனை டோஸ் போட்டுள்ளார்? போன்ற விவரங்கள் அனைத்தையும் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளது. தற்போது பெரும்பாலான சேவைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வசதி பெறும் பயன் உள்ளதாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி நிலவரங்களை, பயண நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் தடுப்பூசி நிலவரங்களை இதன் மூலம் சோதிக்க முடியும்.

Categories

Tech |