Categories
தேசிய செய்திகள்

இனி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒருவேளை சாலை விபத்தில் அவர் உயிர் இழக்கும் போது அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கான உறுதி சான்றாக இது அமையும்.

இதற்காக மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் அளிப்போர் மற்றும் பழகுநர் உரிமம் பெறுபவர்கள், உரிமம் புதுப்பிப்பவர்கள் போன்ற அனைவருக்கும் இந்த உறுப்பு தானத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |