ஆப்கன் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது பெண்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கைப்பற்றியுள்ளார்கள். அவ்வாறு நாட்டை கைப்பற்றி தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கன் பெண்களுக்கு எதிராக அந்நாட்டில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போதும் தலிபான்கள் பெண்களுக்கு எதிரான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆப்கன் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.