நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோதி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. முந்தைய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில் சேவையை விட, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
Categories