ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.