பொதுவாக தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்குவதற்கு நாம் நீண்ட தூரம் உள்ள நகைக் கடைகளை தேடிச் செல்ல வேண்டியிருக்கும். ஒருவேளை அப்படி செல்லாமல் உங்களுக்கு அருகிலேயே தங்க நாணயங்கள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்? அதுவும் ஏடிஎம் இயந்திரம் மூலமாக கிடைத்தால்?… நன்றாக தான் இருக்கும். அப்படி ஏடிஎம் இயந்திரங்கள் இலையே தங்க நாணயங்களை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிஷ்க் நிறுவனம் சார்பில் இந்த ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த ஏடிஎம் மிஷினில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் தங்க நாணயங்களை எடுத்து கொள்ளலாம்.
24 மணி நேரமும் இது செயல்பாட்டில் இருக்கும். 24 கேரட் தங்க நாணயங்களை நீங்கள் இந்த ஏடிஎம் மெஷின் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும். தனிஷ்க் நகைக்கடைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்த ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 21 இடங்களில் இந்த வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்கள் மிக எளிதில் தங்க நாணயங்களை வாங்கிக்கொள்ள முடியும். இதற்காக கடைக்கு செல்ல வேண்டி அலைச்சலும் இல்லை மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சிரமமும் இல்லை. இந்த வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்த வசதி வாடிக்கையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது.