தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் 30 நாட்கள் வரை ரூ.100, ஓராண்டுக்கு ரூ.200, ஓராண்டுக்கு மேல் ரூ.500 கால தாமத கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.