இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
அதன்படி ஜன் தன் வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு வங்கி சேவை வழங்க தொடங்கப்பட்டது தான் ஜன்தன் கணக்குகள். மாதம் 4 பரிவர்த்தனைக்கு அதிகமானால், மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு வசூலிக்கப்படுவது போல பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகையும் தற்போது திரும்ப வழங்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.