பண்டிகைக்கால ரயில்களில் இனி தட்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்னும் 5 நாட்களில் அனைத்து ரயில் எண்களும் வழக்கமான எண்களாக மாற்றப்பட உள்ளது. இந்திய ரயில்வே வாரியம் கடந்த 12ஆம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில்களிலும் இயங்கலாம் என அனுமதி அளித்தது.
அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 86 விடுமுறை காலம் மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் மற்றும் தட்கல் கட்டணத்தில் இருந்து வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.