தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என்று ஜிஎஸ்டி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல உணவகங்களில் உணவகங்களில் பார்சல் வழங்கும் உணவுகள் சேவை வரி விதிப்பு ஜிஎஸ்டி துறை உத்தரவிட்டு இருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பார்சலில் விற்பனை செய்யப்படும்போது ஓட்டல்களில் சேவை தரப்படுவதில்லை. அதனால் அது சேவை வரிக்குள் வராது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.