பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்து இருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம் பின் நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்ல்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று யூஜிசி கண்டறிந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த நடைமுறையை மாற்றி மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என விதிமுறையை விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த இருக்கிறது.