இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். குறிப்பாக திரையுலக, அரசியல் பிரபலங்கள் அதில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபலிக்காது என்றும் ஒரு மாதத்தில் தானாகவே சர்வரில் இருந்து அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.