அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதற்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் தனி கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்த ரூபாய் 200 ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் 6 கோடி வரையிலான செலவீனத்தை அரசு ஏற்றுக்கொள்ளும். இதன் மூலமாக 3 . 5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.