Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி…. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணி பெண்களிடம் ட்ரையல் பார்க்கப்படவில்லை என்பதால் மத்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை பரிந்துரை செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |