நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இனி கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்க்கவா தெரிவித்துள்ளார்.